தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை சுங்க கட்டண மையம் விவகாரம்: அரசு தரப்பிற்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்! - மதுரை கட்டண மையம் விவகாரம்

மதுரை: சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது.

Madurai Payment Center: High Court granting time to Government
Madurai Payment Center: High Court granting time to Government

By

Published : Dec 12, 2019, 8:54 AM IST

மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த இம்மானுவேல், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,

அதில், "மதுரை உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தற்போது மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் டோல்கேட் மையம் அமைக்கப்பட்டு, செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என மூன்று டோல்கேட் மையங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. தற்போது சென்னையிலிருந்து விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்), கப்பலூர் என ஐந்து டோல்கேட் மையங்களில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. டோல்கேட்டுகளில் வாகனங்கள் தேங்கி நிற்பதால் அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சிரமப்படுகின்றன.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, 4 வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் தான் டோல்கேட் மையம் அமைக்க வேண்டும். மேலும் அதில் செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 0.65 பைசா தான் வசூலிக்க வேண்டும். ஆனால் மதுரை மாவட்டத்தில் மஸ்தான்பட்டியில் இருந்து விமானநிலையம் அருகில் உள்ள பரம்புப்பட்டி (விமானநிலையம் அருகில்) வரை 27 கிலோ மீட்டருக்குள் 3 டோல்கேட் மையங்களில் இந்த வாகனங்களிடம் இருந்து ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது. எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் 3 சுங்க கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். 3 சுங்க கட்டண மையங்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதிகள் துரைசுவாமி ,ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...பனிச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details