தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளுக்குப் பண உதவி செய்ய மறுத்த மகன்: வேதனையில் பெற்றோர் தற்கொலை - parents suicide in madurai

மதுரை: மகளுக்கு உதவிசெய்ய மகன் மறுத்த காரணத்தால் மனம் நொந்துப்போன பெற்றோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

suicide
suicide

By

Published : Jun 4, 2020, 5:55 PM IST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜன், கமலம் தம்பதி. இவர்களது மகன் சதீஷ்குமாருடன் இவர்கள் வாழ்ந்துவந்தனர். இந்நிலையில், பண கஷ்டத்தில் இருக்கும் மகளுக்கு உதவுமாறு மகன் சதீஷிடம் இவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

அதனை ஏற்க மறுத்த சதீஷ், தனது தாய் தந்தையோடு அடிக்கடித் தகராறு செய்துள்ளார். இதனால் மனம் நொந்துபோன தம்பதியர் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனையடுத்து, நேற்று அதிகாலை மேலூர் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பாண்டியராஜன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதே இடத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், கமலம் துடிதுடித்துக் கொண்டிருந்தார், உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மகளுக்காக உதவிகேட்ட பெற்றோரிடம் மகன் சண்டையிட்ட காரணத்தால் அவர்கள் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கொட்டாம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:காதலை சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் தற்கொலை முயற்சி

ABOUT THE AUTHOR

...view details