மதுரை:மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம்பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காளைகளை பிடிக்க உள்ளனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்ட பின் போட்டி தொடங்கியது.
ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்று நடைபெறுகிறது. முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டுவருகிறது.
போட்டியில் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.