மதுரையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 303 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரையில் நேற்று 303 பேருக்கு கரோனா உறுதி; பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு - corona news
மதுரை: மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 303 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் வைரஸ் தொற்று காரணமாக நேற்று மட்டும் 303 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2,302 ஆக அதிகரித்துள்ளது.
மதுரையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், தற்போது 1,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 609 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது வரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.