மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
ரயில்வே மேம்பாலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட வட மாநில இளைஞர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எல்லீஸ் நகர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் பட்டாக்கத்தி கைப்பற்றபட்டுள்ளது. மேலும், யார் இந்த இளைஞர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையம் அருகே பட்டப் பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தப்பை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ற கும்பல்!