மதுரை: மதுரையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணி மதுரை மாநகராட்சியில் 80 விழுக்காடு இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து திமுக வேட்பாளர் இந்திராணி மதுரை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன்படி இன்று (மார்ச் 4) மதுரை மாநகராட்சி மேயராக பதவியேற்றார்.
அப்போது மதுரை மாநகராட்சியின் பாரம்பரிய உடையான 101 சவரன் தங்க அங்கியை அணிந்து மாமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுரையின் மாமன்ற நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இதனால் தங்க அங்கியானது மதுரை மாநகராட்சி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திராணிஅணிந்தார்.