தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - கோவைக்கு விரைவு ரயில் இயக்கப்படும் - வெங்கடேசன் எம்.பி. உறுதி - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

மதுரை:  மதுரை - கோவை விரைவு ரயில், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

press meet

By

Published : Oct 26, 2019, 2:33 AM IST

இது தொடர்பாக அவர் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், மதுரை - கோவைக்கு விரைவு ரயில் புதிதாக இயக்கவும், மதுரை ரயில் நிலையத்திற்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு 6 நிமிடம் வரை இலவசமாக வந்து செல்ல அனுமதிக்க வழங்க வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை நாடாளுமனறத்தில் முன்வைத்துள்ளேன்.

கீழடியில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை தற்காலிகமாக அருங்காட்சியகம் அமைத்து மக்கள் பார்வைக்கு கொண்டுவர வேண்டும், மதுரை முதல் சென்னை வரை வழித்தடத்தில் உள்ள தேஜாஸ் ரயிலின் பெயரை மதுரை தமிழ்ச்சங்கம் என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளேன் என்றார்.

எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் படிஙக:ஆழ்துளை கிணறுக்குள் தவறி விழுந்த குழந்தை: நிகழ்விடத்தில் முகாமிட்ட அமைச்சர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details