மதுரை : செல்லூர் வைகை ஆற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆய்வு செய்தனர்.
பின்னர்,செய்தியாளர்களை சந்தித்து பேசிய சு.வெங்கடேசன், "மதுரை செல்லூர் பாலத்தின் அடியில் சங்க இலக்கிய வரைபடங்கள், ஓவியங்கள் அடங்கிய இரண்டு பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடம் அமையவுள்ளது.வைகைக் கரையில் இரண்டு புறங்களிலும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவதற்கான இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளோம்.
வைகை ஆற்றில் ரசாயனம் கலப்பது, குப்பை கொட்டுவது, கருவேல மரங்களை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக செப்.17ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆய்வு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.