மதுரை: மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும் உள்ள சு.வெங்கடேசன் நாட்டின் 73ஆவது குடியரசு நாளை முன்னிட்டு, நேற்று மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு தன்னுடைய கட்சி பிரதிநிதிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பிறகு அங்கிருந்து யானைக்கல், வெற்றிலைப்பேட்டை, முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாகத் தெப்பக்குளம் சென்று மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார். தன்னுடைய கட்சிப் பிரதிநிதிகளோடு இருசக்கர வாகனத்தைத் தானே ஓட்டியவாறு பயணம் மேற்கொண்டார். அவரோடு நான்கிற்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சித் தொண்டர்களும் உடன் வந்தனர்.
இந்தப் பயணத்தின் போது சு.வெங்கடேசன் தலைக்கவசம் மட்டுமன்றி, முகக்கவசமும் அணியாமல் சென்றது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்குத் தவறான முன்மாதிரி!