தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கீழடி ஆய்விடங்களை அரசுடமையாக்க வேண்டும் - எம். பி வலியுறுத்தல் - கீழடி ஆய்விடங்களை பாதுகாப்பான இடங்களாக அறிவிக்கப்பட்டவேண்டும்

மதுரை: கீழடி அகழ்வாய்வு இடங்களை அரசுடைமையாக்கி, அதனை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவேண்டும் என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியிறுத்தியுள்ளார்.

madurai mp su.venkadesan about keezhadi research place

By

Published : Nov 2, 2019, 6:46 PM IST

Updated : Nov 2, 2019, 7:05 PM IST

மதுரையில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவுபெறும். மேலும் இந்தப் பகுதியில் சாலை விபத்துகளைக் குறைக்க மூன்று நாட்களுக்குள் தற்காலிக சாலைகள் அமைக்கப்படும். குடிமராமத்து பணிகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அரசு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

செய்தியாளர்களை சந்திக்கும் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்

தொடர்ந்து பேசிய அவர், கீழடி அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் 12கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று எனவும், அகழ்வாய்வு நடைபெற்ற இடங்களை விவசாயிகளிடம் பேசி உரிய நிவாரணம் கொடுத்து அந்த இடத்தை அரசுடைமையாக்க வேண்டும் எனவும், அந்த இடஙகள் அனைத்தையும் அரசு பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு- தமிழச்சி தங்கப்பாண்டியன் வரவேற்பு

Last Updated : Nov 2, 2019, 7:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details