இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஏதாவது ஒரு மீறல் கவனத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேந்திரிய வித்யாலயா.
ஒரு பணி நியமன அறிவிக்கை சென்னை ஐ.ஐ.டி & சி.எல்.ஆர்.ஐ கேந்திரிய வித்யாலயாவால் 13/10/2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், யோகா ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது; அதற்கான "வாக் இன் இன்டர்வியூ" 20.10.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம்
இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை 14.10.2021 அன்று அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுப்பியுள்ள கேள்விகள்.
இது நிரந்தர காலியிடங்களை நிரப்ப கொல்லைப் புற வழியா? மொத்த பணியிடங்கள் எவ்வளவு? காலியாக இருப்பவை எவ்வளவு? அவற்றை நிரப்ப நிரந்தர பணி நியமனங்களுக்கு என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது? ஏன் ஓராண்டு முன்பாகவே அடுத்த ஆண்டுக்கான தேவையை கணக்கில் கொண்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது?