தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிவாயு குழாய் பதிப்பால் பாதிப்படைந்த விவசாயிகளை சந்தித்த சு.வெங்கடேசன் எம்பி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

Kottampatti gas pipeline project
எரிவாயுக் குழாய் பதிப்பால் பாதிப்படைந்த விவசாயிகளை சந்தித்த சு. வெங்கடேசன் எம்பி

By

Published : Dec 11, 2020, 7:11 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 18 கிலோமீட்டர் நீளத்திற்கு அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள், தோப்புகள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுவதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களை சந்தித்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, "ஏற்கெனவே இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான வகையில் இழப்பீடு வழங்க அரசிடம் வலியுறுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளை எந்தவிதமான கட்டாயப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படாமையை உறுதி செய்யவேண்டும்.

குழாய் பதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட சு. வெங்கடேசன்

இத்திட்டம் தொடர்பான எந்த இறுதி முடிவும் கிராமசபைகள் மூலமே எடுக்கப்பட வேண்டும். சில அரசியல் கட்சியினர், இடைத்தரகர்களை வைத்து விவசாயிகளை சம்மதிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களவை உறுப்பினராகிய நீங்கள் கண்டிக்க வேண்டும். பெரியாறு ஆற்றோடு காவிரி நதியினை இணைத்து கொட்டாம்பட்டி, நத்தம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் பாசன வசதி செய்து தர முயற்சிகள் எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் வைத்தனர்.

கொட்டாம்பட்டி பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து மக்களவை உறுப்பினர் என்கிற முறையில் உரிய முயற்சிகளை மேற்கொள்வதாக சு.வெங்கடேசன் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:எங்களின் நிலத்தை அழித்து எரிவாயுக்குழாயா? - ஐஓசிக்கு எதிராக கொந்தளிக்கும் கிராமத்தினர்

ABOUT THE AUTHOR

...view details