மதுரை அனுப்பானடியில் எம்ஜிஆர் - ஜெயலலிதாவுக்கு அதிமுக தொண்டர்களால் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 32ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ஈடிவி பாரத் செய்தியாளர்கள் எம்ஜிஆர் கோயிலின் பூசாரி நாகராஜை சந்தித்தோம்.
இந்த கோயில் குறித்து அவர் கூறுகையில், ‘எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் கடந்த 1988ஆம் ஆண்டு இக்கோயில் உருவாக்கப்பட்டது. கடந்த 33 ஆண்டுகளாக எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகழையும் நினைவையும் போற்றும் வகையில் இந்தக் கோயிலை சிறப்பாக நடத்தி வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாட்களில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் 36 பேர் முடி காணிக்கை செய்தனர்.