இவ்விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெற்று வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் , கார்த்திகை உற்சவம் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும், 10ஆம் தேதி கார்த்திகையன்று ஆலயம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இத்திருவிழாவின் தொடக்கமாக இன்று காலை சாமி சன்னதி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை பெருவிழா முன்னதாக பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து, வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்கிட, கொடி ஏற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: சாலையில் கிடந்த ரூ. 4.5 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த மதுரைக்காரர்!