மதுரை:உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் திறப்பு, கோயில் இணை ஆணையர் செல்லத்துரை முன்னிலையில் நேற்று (ஜன 25) நடைபெற்றது.
அதில் ரொக்கமாக ஒரு கோடியே 51 லட்சத்து 41 ஆயிரத்து 196 ரூபாய், பலமாற்று பொன் இனங்கள் ஒரு கிலோ 120 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 3 கிலோ 540 கிராம், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 117 வரப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.