தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடல் - மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை: தைப்பூச தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடை சாத்தப்படும்.

madurai meenakshi temple
madurai meenakshi temple gate closed due to Theppa Thiruvizha

By

Published : Feb 8, 2020, 2:45 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா இன்று (பிப். 8) நடைபெறுகிறது.

அதனையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலிருந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் சென்று அங்கு தெப்பத் திருவிழா நடைபெற்று இரவு திருக்கோவிலுக்கு வந்து சேரும் வரை கோவில் நடை சாத்தப்படுகிறது.

இன்றைய தினம் வருகை தருகின்ற பக்தர்களுக்காக கோவிலின் உள்ளே அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும்.

ஆகையால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணியிலிருந்து 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரையும் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது

இதற்கிடையே தெப்பத்திருவிழா நடைபெறும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.

ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகிதமாக பிரியாவிடையும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

மாநகர காவல்துறை சார்பாக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வடலூர் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; நாளை ஜோதி தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details