மதுரை:மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் புகழ்பெற்ற ஆன்மிக நிகழ்வாகும். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கிறார் என்பது இந்த நிகழ்வின் ஐதீகமாகும்.
சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக சப்பரங்களில் உலா வந்தனர்.