மதுரையின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாகவும் உலகப்புகழ் பெற்றும் விளங்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வந்த www.meenakshitemple.org அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது.
மீனாட்சியம்மன் கோயில் இணையதளம் முடங்கியதால் பக்தர்கள் அவதி - மதுரை மீனாட்சியம்மன் கோயில்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது. இதனால், பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோயில் திருவிழா, கோயிலின் வரலாறு, கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட வசதிகள் இந்த இணையதளத்தில் உள்ளன. இந்நிலையில் கோயில் இணையதளம் முடங்கியதன் காரணமாக வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பெரிதும் அவதியுற்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோயில் இணையதளம் முடங்கியதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம்போல் தளம் இயங்கும் எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கொட்டும் மழையிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!