தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

madurai meenakshi amman festival : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் வீதி உலா - மீனாட்சி அம்மமன் கோயில் திருவிழா

madurai meenakshi amman festival : மதுரை மீனாட்சி கோயிலில் நடைபெற்ற அஷ்டமி சப்பரம் வீதி உலா நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி கோவிலில் அஷ்டமி சப்பரம் வீதி உலா
மதுரை மீனாட்சி கோவிலில் அஷ்டமி சப்பரம் வீதி உலா

By

Published : Dec 27, 2021, 1:42 PM IST

மதுரை : madurai meenakshi amman festival : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே போல் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளி வீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் புகழ் பெற்றது.

இத்திருவிழாவில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் லீலை முத்தாய்ப்பானது. விழா நாளன்று சுந்தரேசுவரர், பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர்.

மதுரை மீனாட்சி கோவிலில் அஷ்டமி சப்பரம் வீதி உலா

இதில் மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுப்பது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.

மதுரை மீனாட்சி கோவிலில் அஷ்டமி சப்பரம் வீதி உலா

பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி என்னும் நோய் ஒழியும் என்பது காலம் காலமாய் பக்தர்களின் நம்பிக்கை.

: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Conclusion:ஒமைக்ரான் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு மத்திய குழு வருகை

ABOUT THE AUTHOR

...view details