தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்த்திகை தீபம்: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்! - மதுரை

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம் முழுவதும் லட்சத்தீபம் ஏற்றப்பட்டதால் மீனாட்சியம்மன் திருக்கோயில் ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

கார்த்திகை பெருவிழா: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்
கார்த்திகை பெருவிழா: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்

By

Published : Dec 7, 2022, 7:27 AM IST

மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவ விழா டிச., 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில் திருக்கார்த்திகை பெருவிழாவிற்குக் கோயில் பொற்றாமரை குளம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதில் கோயில் பணியாளர்கள் பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக் குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட ஆலயம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்ச தீபங்களை ஏற்றினர்.

கார்த்திகை பெருவிழா: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்

இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து சித்திரை வீதியில் அம்மன் சன்னதி முன்பாகவும், சுவாமி சன்னதி முன்பாகவும் என இரண்டு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

இதையும் படிங்க:அர்ஜூன் சம்பத் மீது செருப்பு வீச்சு: விசிகவினர் கைது

ABOUT THE AUTHOR

...view details