மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக வாகன நிறுத்துமிடம் (பார்க்கிங்) கட்டப்பட்டுவருகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஆச்சர்யம்! - amman temple
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கான வாகன நிறுத்துமிட கட்டுமான பணியின்போது கருங்கல் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
madurai
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை 30 அடி அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும், வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுவரும் பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்து சிறைச்சாலை இருந்ததால், இது பாதாளச் சிறையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.