தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரை திருவிழா: 9ஆம் நாளில் அம்மனின் திக்விஜயம் - chithra festivel madurai

மதுரை சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளில் அன்னை தவக்கோலம் பூண்டு இறைவனின் சோதனைகளுக்கு உட்பட்டு திருக்கல்யாணம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

madurai meemakchi amman festivel
madurai meemakchi amman festivel

By

Published : Apr 24, 2021, 9:54 AM IST

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விழாக்கள் நடைபெறும் நேரங்களிலும், சுவாமி புறப்பாடு நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா நாள்தோறும் சுவாமியும், அம்மனும் சிம்மவாகனம், அன்ன வாகனம், தங்க குதிரை வாகனத்தில் என எழுந்தருளி கோயில் ஆடி வீதிகளில் பவனி வந்தனர்.

இந்த நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று (ஏப்.23) மாலை பிறதலங்களில் அன்னை தவக்கோலம் பூண்டு இறைவனின் சோதனைகளுக்கு உட்பட்டு திருக்கல்யாணம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

9ஆம் நாளில் அம்மனின் திக்விஜயம்

மதுராபுரி அம்பிகை மாலை

பூண்ட கை வாரிப், புது மலர் தூவி, நின் பொன் அடிக்கே
கூண்ட கை, சென்னி குவிக்கப் பெற்றேன் - பிறைக்கோடு அணிந்து,
நீண்ட கை வேழப் பிடர் ஏறி, வட்ட நிலம் புரக்கும்
ஆண் தகையே! அணங்கே! மதுராபுரி அம்பிகையே!

ABOUT THE AUTHOR

...view details