ஆசிய சமூகம் மற்றும் சண்டிகர் பிஜிஐ மருத்துவக் கல்லூரி இணைந்து கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, மருத்துவக் கல்வியில் நியூரோஃப்தால்மாலஜி வெப்சீரிஸ் வினாடி வினா திட்டத்தை தொடங்கி நடத்தி வந்தது.
தேசிய வினாடி வினா போட்டியில் 2ஆம் இடம் பெற்ற மருத்துவக் கல்லூரி மாணவி - தேசிய வினாடி வினா போட்டியில் 2-ஆம் இடம்
தேசிய அளவில் நடைபெற்ற மருத்துவம் தொடர்பான வினாடி வினா போட்டியில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவி அமராவதி மர்கலா, இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
madurai medical college student won national level quiz competition
இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவியர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில், மதுரை மருத்துவக் கல்லூரி நரம்பியல் துறையைச் சேர்ந்த மாணவி அமராவதி, இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசையும் அவர் வென்றுள்ளார்.
இந்நிலையில், மாணவியின் இந்தச் சாதனையை மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி, நரம்பியல் துறை தலைவர் முருகன், பேராசிரியர்கள் மணிவண்ணன், ஜஸ்டின் ஆகியோர் பாராட்டினர்.