கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு வருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக, மதுரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 400 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்துவதற்கான அறைகள் தயார் செய்யப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வாட்ஸ்-அப் என்ற செயலியில் உள்ள கரடிப்பட்டி மற்றும் வடபழஞ்சி குரூப் என்ற பக்கத்தில், வடபழஞ்சிச் சேர்ந்த திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைச் சேர்மன் இந்திராயின் கணவர் ஜெயக்குமார் என்பவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணி நடந்து வருவதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தால் நமது பகுதியிலும் நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் எனத் தவறான செய்தியைப் பரப்பியுள்ளார்.