தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் உட்பட 4 பேருக்கு 10 வருட சிறை தண்டனை! - துவரிமான் வரதட்சணை வழக்கு

மதுரை: புதுமணப் பெண்ணை வரதட்சணை கேட்டு தற்கொலைக்குத் தூண்டிய கணவன் உட்பட நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

madurai mahila court

By

Published : Nov 13, 2019, 10:26 PM IST

மதுரை துவரிமான் பகுதியைச் சேர்ந்த மலைச்சாமியின் மகள் பிரியா. இவருக்கும் மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில தினங்களிலேயே வரதட்சணை கேட்டு பிரியாவின் கணவன் முத்து, அத்தை சாந்தி, மாமனார் கணேசன், கணவரின் தம்பி சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேரும் தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து நான்கு பேர் மீதும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

மதுரை மகிளா நீதிமன்றம்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு

ABOUT THE AUTHOR

...view details