மதுரை:சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் மூதாட்டியைக் கற்பழித்து கொலை செய்தார். இந்த வழக்கில் மணிமாறனைக் கைது செய்த போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நவம்பர் 21ஆம் தேதி ஜாமினில் வெளிவந்த மணிமாறன், வேறு ஒரு மூதாட்டியை கற்பழித்தார். இது தொடர்பாக சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கிலிருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் சிவபாலன் இந்தப் ஜாமின் ரத்து செய்ய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம், மணிமாறனின் ஜாமின் மனுவை ரத்து செய்தது.
இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், வரும் காலங்களில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களின் ஜாமின் ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் "சோப்தார்" நியமனம்!