தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் குப்பை லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.!

மதுரை: மாநகராட்சி குப்பை லாரி மோதி பொறியியல் கல்லூரி மாணவனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Madurai Lorry Accident Death Lorry Accident Death Two Wheeler Accident Death மதுரை லாரி விபத்து பலி லாரி விபத்து பலி இருசக்கர வாகன விபத்து பலி குப்பை லாரி மோதி பொறியியல் கல்லூரி மாணவன் உயிரிழப்பு
Madurai Lorry Accident Death

By

Published : Mar 11, 2020, 7:50 PM IST

மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவனர் கார்த்திகேயன். இவர் வில்லபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி நகரில் இருசக்கர வாகனத்தில் காரியப்பட்டியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மாநகராட்சி குப்பை லாரி குறுக்கே வந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்து நடந்த இடத்தில் காவல் துறையினர் சோதனை

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணையில் குப்பை லாரி ஓட்டுநர் மது அருந்தி இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டவுடன் வாகனத்திலிருந்து இறங்கி தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும் விபத்து குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் மின்கசிவு காரணமாக 2 வீடுகள் தீயில் நாசம்

ABOUT THE AUTHOR

...view details