மதுரை - மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர், உதயம். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர், தனது வீட்டின் சுவரை இடித்துவிட்டு கட்டுமானப் பணி செய்யும் பொழுது பக்கத்து வீடான உதயம் என்பவரின் வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளார்.
இந்நிலையில், புதியதாக சுவர் கட்டித் தருவதாகக்கூறி நீண்ட நாள்களாக ஜெயராஜ் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று(அக்.07) உதயம், ஜெயராஜிடம் கேட்டதற்கு ஜெயராஜும், அவருடைய மனைவியும் உதயத்தை சாதி ரீதியாக அவதூறாகப் பேசி கட்டித் தர மறுத்துள்ளனர்.