தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிகிச்சைக்கு ஒத்துழைக்காத வழக்கறிஞர் பலி! - hospital

மதுரை: விபத்தில் படுகாயமடைந்த சங்கர நாராயணன் என்ற வழக்கறிஞர் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மருத்துவமனையைவிட்டு ஓடியபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் பலி

By

Published : Jul 27, 2019, 11:41 AM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களான செந்தில்குமார், சங்கர நாராயணன் நேற்றிரவு ஒத்தக்கடை பகுதியில் உள்ள 4 வழிச்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது கடுமையாக மோதியது. இதில் படுகாயமடைந்து மயங்கிய இருவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

படுகாயமடைந்த நிலையிலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து கூச்சலிட்டபடியே இருந்துள்ளனர். திடீரென தனக்கு உரிய சிகிச்சை இல்லை என கூறிவிட்டு இருவரும் தள்ளாடியபடியே தனியார் மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்காமலே புறப்பட முற்பட்டனர்.

அப்போது, சங்கர நாராயணன் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details