தமிழ்நாடு

tamil nadu

'தமிழ் சட்ட நூல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்' - சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

By

Published : Feb 11, 2020, 1:43 PM IST

மதுரை: நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் மனு

மதுரை சட்டக்கல்லூரியில் உள்ள நூலகத்தில் தமிழ் சட்ட நூல்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், "மதுரை சட்டக்கல்லூரி நூலகத்தில் ஆங்கில நூல்களே அதிகம் உள்ளன. ஆனால், தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களே அதிகம் என்பதால் தமிழ் சட்ட நூல்கள் இருந்ததால்தான் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக இருக்கும். 2001ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் நிறைய வந்தன. ஆனால் தற்போது அதுபோன்ற நூல்கள் வரத்து குறைவாக உள்ளது. சிறந்த சட்ட வல்லுனர்களின் ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எங்களுக்கு அளித்தால் மட்டுமே தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்" என்றனர்.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் புத்த பிட்சு வேடத்தில் 2 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details