தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் இன்று 82 பேருக்கு கரோனா உறுதி - Madurai district News

மதுரை : கரோனா தொற்றின் காரணமாக மதுரையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.

Madurai Latest Corona Update
Madurai Latest Corona Update

By

Published : Sep 18, 2020, 8:52 PM IST

மதுரையில் கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது. மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து ஜூலை இறுதி வாரத்தில் இருந்து படிப்படியாக குறைய தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 724 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 617 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 377 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 730 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மதுரையின் இன்று (செப்.18) 82 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 165 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details