தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீர் தர கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - madurai kombadi village water issue at high court bench

மதுரை: கொம்பாடி கிராம கண்மாய்க்கு தண்ணீர் தர கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை
மதுரை

By

Published : Feb 1, 2021, 5:54 PM IST

மதுரையை சேர்ந்த சுல்தான், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், " கொம்பாடி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த குடும்பங்கள் கிராமத்தில் உள்ள கீழ கண்மாய், மேல கண்மாயில் உள்ள நீரை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக கொம்பாடி கிராமத்திற்கு தண்ணீர் வரத்து உள்ளது. ஆனால் நெடுமதுரை கண்மாய்க்கு தண்ணீர் வரத்து மாற்றி அமைக்கப்பட்டது. இதனால், கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள், குடிநீர் தேவை பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து கொம்பாடி கிராமத்திற்கு நிலையூர் கம்பிக்குடி வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை, நெடுமதுரை கிராமத்தினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தடுப்பு அமைத்து, தண்ணீரை கொம்பாடி கிராம கண்மாய்க்கு வருவதை தடுத்தனர். அரசு அலுவலர்கள் மூலம் இரு கிராமங்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், நிலையூர் கம்பக்குடி கால்வாய் வழியாக கொம்பாடி மேல கண்மாய், கீழ கண்மாய்க்கு தண்ணீர் தர பேச்சுவார்த்தை நடைபெற்றது. கொம்பாடி கிராமத்திற்கு தண்ணீர் தருவதாக அலுவலர்கள் உறுதி அளித்தனர்.

ஆனால், தற்போது வரை கொம்பாடி கண்மாய்க்கு தண்ணீர் அனுப்பவில்லை. எனவே நிலையூர் கம்பிக்குடி வாய்க்கால் வழியாக கொம்பாடி மேல கண்மாய், கீழ கண்மாய்க்கு தண்ணீர் தர அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

ABOUT THE AUTHOR

...view details