தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிசான் திட்டம் முறைகேடு - 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மீட்பு! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை : கிசான் திட்டம் முறைகேடு விவகாரத்தில் தகுதியற்றவர்களிடமிருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

madurai kissan fraud money recover
madurai kissan fraud money recover

By

Published : Oct 8, 2020, 1:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து மாவட்ட வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தவகையில் மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 77 பேர் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது.

தற்போதுவரை சுமார் 5 ஆயிரத்து 930 பேரிடமிருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவிற்கு திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ள பணத்தை மீட்க அலுவலர்கள் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். மேலும், தகுதியற்றவர்கள் கண்டறியபட்டு அவர்களிடமிருந்து காவல் துறையின் உதவியுடன் சிறப்பு குழு பணத்தை மீட்க மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினாய் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று(அக்.8) முதல் காவல் துறையினர் பாதுகாப்புடன் சிறப்பு குழுவினர், பணத்தை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் அடைந்துள்ளனர். மேலும், வேளாண்மை இணை இயக்குனர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே இரண்டு பேரை சிபிசிஐடியினர் கைது செய்துள்ள நிலையில், அலுவலர்கள், முகவர்கள் இன்று(அக்.8) கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:

தொல்லியல் துறையில் தமிழ் புறக்கணிப்பு - அவசர வழக்காக நாளை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details