மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர், 'மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வில் 20 பேர் நேர்காணலுக்குத் தகுதியானவர்கள் என்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்வாகியுள்ள பேராசிரியர் கர்ண மகாராஜன், தேர்வாணையர் ரவி ஆகிய இருவர் மீதும் துறை ரிதீயான நடவடிக்கை நிலுவையில் உள்ளது. இதனடிப்படையில் இருவரது விண்ணப்பங்களையும் நிராகரிக்காமல் தேர்வு செய்தது சட்டவிரோதமானது.
மேலும், பதிவாளருக்கான நேர்காணல் தேர்வை காரணமேயின்றி இரு முறை ஒத்திவைத்துள்ளார்கள். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளிக்க வேண்டும். புதிய துணைவேந்தராக கிருஷ்ணன் பொறுப்பேற்றபோது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.