தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடைத்தாள் முறைகேடு - சிபிஐ விசாரிக்க பல்கலைக்கழக விசாரணைக் குழு பரிந்துரை - விடைத்தாள் முறைகேடு

மதுரை: தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து முழுமையாக விசாரிக்க சிபிஐக்கு பரிந்துரைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநருக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

By

Published : Sep 3, 2020, 9:43 PM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பாக கேரளாவில் உள்ள மூன்று மையங்களில் பயின்ற மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி தேர்வில் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதற்கு பல்கலைக்கழக அலுவலர்கள், ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாது கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடு அண்மையில், பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீடு நடைபெற்ற போது கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக பெண் விரிவுரையாளர் மீது எழுந்த புகாரை விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் லக்ஷ்மிபதி, தீனதயாளன், பாரி பரமேஸ்வரன், ஷகிலா ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு விசாரணை நடத்தியது.

மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக பல்கலைக்கழக கல்லூரி பெண் விரிவுரையாளர் கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தேர்வுத் துறை ஊழியர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விசாரணை அறிக்கை துணைவேந்தர் கிருஷ்ணனிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்குழு அறிக்கை தொடர்பாக பல்கலைக்கழக உயர் அலுவலர்கள் கூறும்போது, விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் மோசடி குறித்து தெரிய வந்தாலும் இதில் உள்ள முழு தொடர்புகளையும் கண்டறிய முடியவில்லை. பல்கலைக்கழக பணியாளர்கள் பலருக்கும் இதில் தொடர்பு உள்ளது. எனவே, கேரள மையத்தில் நடைபெற்ற முறைகேடு, மறுமதிப்பீடு முறையீடு உள்ளிட்டவற்றை சிபிஐ மூலம் விசாரிக்கலாம் என விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், விசாரணைக்குழுவின் அறிக்கை தமிழ்நாடு ஆளுநர், உயர்கல்வித் துறை செயலர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநரிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details