கரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்துவருவதால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்த வண்ணம் உள்ளன.
இதனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் 97 உறுப்புக் கல்லூரிகள் அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இருக்கும் 97 உறுப்புக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணையதளம் மூலமும் அந்தந்தத் துறை தலைவர்கள் மூலம் மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு தெரியப்படுத்துகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 97 உறுப்புக் கல்லூரிகள் தங்களது இணையதளங்களில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை பதிவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் 97 உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கல்லூரிகளில் தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் ஒத்திவைப்பு! - மதுரை காமராஜர் கல்லூரிகளில் தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் ஒத்திவைப்பு
மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் 97 உறுப்பு கல்லூரிகளிலும் தேதி குறிப்பிடாமல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து அறிவித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்