தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காமராஜர் பல்கலை தொலைதூர கல்வி தேர்வு முறைகேடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - மதுரை கிளை உயர்நீதிமன்ற

மதுரை: காமராஜர் பல்கலைகழக தொலை தூர கல்வி துறை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

காமராஜர் பல்கலை கழகம்
காமராஜர் பல்கலை கழகம்

By

Published : Apr 30, 2021, 11:39 PM IST

மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ் சுமார் 1.25 லட்சம் பேர் பல்வேறு படிப்புகளில் படிக்கின்றனர். பல இடங்களில் பல்கலைக்கழக மையங்கள் உள்ளன. சில ஆண்டுக்கு நடந்த தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளளன. ஒரு சில மையங்களில் தேர்வர்கள் அவரவர் இருப்பிடத்தில் இருந்தவாறு தேர்வெழுதியுள்ளனர். பல இடங்களில் இருந்து விடைத்தாள்கள் பல மாதங்களுக்கு பிறகே பல்கலைக் கழகத்திற்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.

எனவே, தொலைதூர கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. டிஎஸ்பி ஒருவரை நியமித்து முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும். மேலும் 6 மாதத்திற்குள் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details