மதுரை விமான நிலையத்தில் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கீழடி அகழாய்வில் ஆறாவது கட்ட ஆய்வு செய்வதற்கு அடுத்த கட்டம் நெருங்கி உள்ளது.
இதற்காகச் சென்னையில் மூத்த பேராசிரியர் பிச்சை அப்பன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோரை சந்தித்து உடனடியாக இந்த ஆய்வை தொடங்க வேண்டும் என்று கடந்த வாரம் வலியுறுத்தினோம். இதற்கு உதயச்சந்திரன் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு கீழடியில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசுடன் ஒரு மாத காலத்திற்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளோம். இதனையடுத்து காமராசர் பல்கலைக்கழக ரூசா திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி ஒதுக்கவுள்ளோம். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டு இருக்கிறோம். வெகு விரைவில் அனுமதி கிடைக்கும்” என்றார்.
இதையும் படிங்க..."100 நாட்களில் தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ரூ. 1 லட்சம்" - "ஸ்லீப் இன்டர்ன்ஷிப்" திட்டம்..!