மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
கள்ளழகருக்கு தீர்த்தவாரி! இன்று அதிகாலையிலேயே பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் வேண்டுதலுக்கிடையே கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர், ஆழ்வார் புறத்திலிருந்து புறப்பட்ட அழகர், சரியாக 10 மணி அளவில் ராமராயர் மண்டபம் வந்தடைந்தார்.
கள்ளழகருக்கு தீர்த்தவாரி! அங்கு கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியை நடத்தினர். தங்க குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகரை பக்தர்கள் அனைவரும் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
கள்ளழகருக்கு தீர்த்தவாரி! இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ராமராயர் மண்டபத்தில் இறங்கும் கள்ளழகர், பிற்பகலில் அங்கிருந்து புறப்பட்டு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் செல்கிறார்.