தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை - காச்சிகுடா சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு! - தெற்கு ரயில்வே

மதுரையில் இருந்து காச்சிகுடா வரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வருகின்ற ஜனவரி மாதம் வரை அந்த சேவை நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

மதுரை காச்சிகுடா ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு
மதுரை காச்சிகுடா ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு

By

Published : Nov 3, 2022, 8:40 PM IST

மதுரையிலிருந்து தெலங்கானாவில் உள்ள காச்சிகுடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 07191 காச்சிகுடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் காச்சிகுடாவிலிருந்து நவம்பர் 7 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 07192 மதுரை - காச்சிகுடா வாராந்திர சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நவம்பர் 9 முதல் பிப்ரவரி 1 வரை புதன் கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 07.05 மணிக்கு காச்சிகுடா சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேனிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டுப்பகுதி ஆக்கிரமிப்பு - 8 வாரத்தில் மீட்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details