மதுரை:தமிழ்நாட்டில் பல இடங்களில் மல்லிகைப்பூ வியாபாரம் கலைகட்டினாலும் மதுரை மண் மனம் மாறாத மல்லிகைக்கு இன்றளவிலும் உலகளவு சந்தையில் அதிக மவுசு தான். மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் பல்வேறு வகையான பூக்கள் அனைத்தும் இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும் மதுரைக்கு அருகே உள்ள பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் மல்லிகை உட்பட மற்ற பூக்களும் இங்கு விற்பனைக்கு வருகிறது.
மேலும் மதுரையிலிருந்து மல்லிகை பூக்கள் பிற மாவட்டங்களுக்கு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை மலர் சந்தையில் மட்டும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 டன் பூக்கள் விற்பனையாகின்றன. மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகள் உண்டு. காரணம் மதுரையின் மலரின் தடித்த காம்பு நல்ல மணம் போன்ற சிறப்பு தன்மைகள் கொண்டவையே.
மதுரை மலர் சந்தையில் இன்றைய மலர் விலை நிலவரத்தை பொருத்த வரையில், கிலோ ஒன்றுக்கு மல்லிகை ரூ.300, பூச்சி ரூ.300, முல்லை ரூ.200, சம்பங்கி ரூ.50, செவ்வந்தி ரூ.200, சென்டு மல்லி ரூ.60, பட்டன் ரோஸ் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிற பூக்களின் விலைகளும் கணிசமாக குறைந்து உள்ளது.