மதுரை: நாளை (நவ.19) திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.1200க்கு விற்பனையாகிறது. பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் மல்லிகை மட்டுமன்றி பிற பூக்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
நாளை திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு அனைத்துப் பூக்களும் கணிசமான விலை ஏற்றம் கண்டுள்ளன. பிற பூக்களின் விலையிலும் கணிசமான விலை ஏற்றம் காணப்படுகிறது. இருப்பினும் கனகாம்பரம் வரத்துக் குறைவாக உள்ளது.
பூக்களின் விலை
- மதுரை மல்லிகை ரூ.1200
- பிச்சி பூ ரூ.700
- முல்லை ரூ.800
- சம்பங்கி ரூ.150
- செவ்வந்தி ரூ.120
- கேந்தி ரூ.150
- பட்டன் ரோஸ் ரூ.120
- பன்னீர் ரோஸ் ரூ.150
- மரிக்கொழுந்து ரூ.200
- அரளி ரூ.500