தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்த மதுரை மல்லி; பொதுமக்கள் மகிழ்ச்சி - madurai flower market price

மதுரை: மல்லியின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை வெகுவாக குறைந்திருக்கிறது, இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

madurai jasmine rate reduced in madurai
உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்த மதுரை மல்லி; பொதுமக்கள் மகிழ்ச்சி

By

Published : Feb 10, 2021, 7:07 PM IST

மதுரை:மதுரை மல்லிகை உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மதுரை மலர் சந்தையில் மல்லிகை வரத்து மிகக் கூடுதலாக உள்ளது. இதன் காரணமாக மதுரை மல்லிகையின் விலை பெருமளவு குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மலர் சந்தையில் மல்லிகைப் பூவின் இன்றைய விலை ரூ.700ல் தொடங்கி ரூபாய் 500வரை விற்றது. பிச்சிப் பூ ரூ.600, முல்லை ரூ.800, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.120, பட் ரோஸ் ரூ.100, தாமரை ஒன்று ரூ.10, மரிக்கொழுந்து ரூ.100 என பிற பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது மல்லிகை பூவின் உற்பத்தி மிக சிறப்பாக இருப்பதால் வரும் வாரத்தில் மேலும் வரத்து கூடும் எனவும் தை அமாவாசையான நாளை, வரும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை கணிசமாக உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:'காகித பூ' கூட மலரும் திமுக ஆட்சி மலராது: செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details