மதுரை: மாட்டுத்தாவணி அருகே உள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டைமாவட்டங்களான விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் விளையும் மலர்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மதுரை மல்லி மட்டும் நாள்தோறும் சராசரியாக 50 டன்னுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் மதுரை மல்லி வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
மதுரை மல்லியின் விலை திடீர் சரிவு; கிலோ ரூ.500க்கு விற்பனை - kg rs 500
மதுரை மலர் சந்தையில் மல்லி விலை கிலோ ரூ 500ஆக விற்பனையாகிறது.
மதுரை மல்லிகையின் விலை திடீர் சரிவு; கிலோ ரூ.500க்கு விற்பனை
இன்று கிலோ மல்லி ரூ 500க்கு விற்பனை ஆகிறது. கிலோ முல்லை 300 ரூபாய்க்கும் , பிச்சி 400 ரூபாய்க்கும் , சம்பங்கி 80 ரூபாய்க்கும் , செண்டுமல்லி 70 ரூபாய்க்கும் , பட்டன் ரோஸ் 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - EWS நடைமுறையை வாபஸ் பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!