தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிடு கிடுவென உயர்ந்த மதுரை மல்லி.. கிலோ ரூ.1200

மதுரை மல்லிகையின் விலை நேற்று வரை கிலோ ரூபாய் 500க்கு விற்ற நிலையில் கூடுதலாக ரூபாய் 700 உயர்ந்து இன்று ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு
மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு

By

Published : May 14, 2022, 12:45 PM IST

மதுரை:எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள மலர் வணிக வளாகத்திற்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள திண்டுக்கல் தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான மலர்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மதுரையின் தனிச்சிறப்பு வாய்ந்த மல்லிகை மதுரையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் மதுரை மல்லிகை விற்பனை செய்யப்பட்டுவருகிறது

இந்நிலையில் கடந்த சில நாள்களாக மதுரை மல்லிகையின் விலை ரூ.300 லிருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மே15) முகூர்த்த தினம் என்பதால் கூடுதலாக ரூ.700 உயர்ந்து இன்று (மே.14) ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி மற்ற மலர்களான,

பிச்சிப்பூ ரூ.600

முல்லை ரூ.600

சம்பங்கி ரூ.150

பட்டன் ரோஸ் ரூ.150

செண்டுமல்லி ரூ.80 என பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது என மதுரை மாட்டுத்தாவணி சில்லரை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். முகூர்த்த நாள்கள் என்பதால் இந்த விலை இருப்பதாகவும் மலர்களின் வரத்து மிக குறைவாக உள்ளதாலும் விலை ஏற்றம் அடுத்த சில நாட்கள் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மதுரையில் மல்லிகை பூ விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை!

ABOUT THE AUTHOR

...view details