மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இன்று (பிப்.15) மதுரை மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து அனைத்து வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
இங்கு நிர்ணயம் செய்யப்படும் பூக்களின் விலை பிற மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். குறிப்பாக மதுரை மல்லிகை பிற மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது பூக்களின் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் அவ்வப்போது விலை குறைந்து காணப்படுகிறது.
நேற்றையதினம் (பிப்.14) சுபமுகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூபாய் 3000 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப்.15) கணிசமாக விலை குறைந்து ரூபாய் 1500-க்கு விற்பனையானது.