தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடெங்கும் நடைபெறும். இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16ஆம் தேதி பாலமேட்டிலும் ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
வாடிவாசல் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளன, ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானம் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்கான கேலரி அமைக்கும் பணியும் நடைபெறவுள்ளதால் பாலமேடு பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது ஜல்லிகட்டு காளைக்கு பயிற்சியளித்துவருகின்றனர்.