மதுரை:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை, தமிழ்நாடு முதன்மை செயலாளர் அறிக்கை ஆகிய இரண்டையும் 'சீலிட்ட' கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஹென்றி திபேன் தாக்கல் செய்த பொது நல மனுவில்,"தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து தமிழ்நாடு அரசிற்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில், புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து தூத்துக்குடிக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டது.
அதன் அறிக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு முதன்மை செயலாளர் தரப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், அக்டோபர் 2018 ஆம் ஆண்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணைய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கை மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
துப்பாக்கிச்சூடு ஏற்புடையதா ?