கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடுவைச் சேர்ந்த ஹோமர்லால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநலமனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் தற்போது இளைஞர்களால் நடைபெறும் விபத்துக்கள் மற்றும் குற்றசம்பவங்கள் பெருமளவு அதிகரித்து வருகின்றன. சாலையின் தரத்தை கருத்தில் கொள்ளாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு கல்வியை மனப்பாடம் செய்து பயில மட்டும் கட்டாயப்படுத்துவதும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்காததும்தான் காரணம்.
என்.சி.சி பயிற்சி அளிப்பது தொடர்பான வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - என்.சி.சி வழக்கு
மதுரை: அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் என்.சி.சி பயிற்சி அளிப்பது தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
எனவே மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், கல்வி தொடர்பான அழுத்தத்திலிருந்து விடுபடவும் இரண்டு வருட ராணுவ வகுப்பு அளித்திட வேண்டும். அதனால், குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் என்.சி.சி பயிற்சியளிக்க வேண்டும். இதனால் மாணவர்களுக்கு கல்வியினால் ஏற்படும் மன அழுத்தம் நீங்கி கல்வி கற்கும் மனநிலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒழுக்கமும், கட்டுப்பாடுமின்றி அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இயலாது. ஆகையால் மாணவர்களுக்கு, பெரியவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட நன்னெறிகளை கற்றுத்தருவது அவசியம் எனக் கூறியது. இந்த வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மனு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது.