சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரத்தைச் சேர்ந்த சிதம்பரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ' திருப்பத்தூர் தாலுகா - நாச்சியார்புரத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்கள் மில்லில் ஏராளமான இயந்திரங்கள் இருப்பதால், பராமரிப்பதற்கு காண்டீபன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவர் தனக்கு உதவியாக கணேசன், ராகவன் ஆகியோரை உதவியாளர்களாக நியமித்தார்.
ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு நான் மில்லுக்குச் சென்றபோது, காண்டீபன் சாவியைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். மில்லில் ஆய்வு செய்தபோது சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரிக்க காண்டீபனுக்குத் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.